அசின் மறுத்த மூன்று வாய்ப்புகள்
- 05.02.2008
By JBR
இந்தி 'கஜினி' வெளிவரும் முன்பே, அசினைத் தேடி பாலிவுட் வாய்ப்புகள் வருகின்றன.
|
|
|
கரீனா கபூரின் முன்னாள் காதலர் ஷாஹித் கபூர் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பு அதில் ஒன்று. இன்னொரு வாய்ப்பு ஹனி இரானியிடமிருந்து வந்தது. இதில் அமிதாப்பச்சனின் மகளாக நடிக்க கேட்டிருக்கிறார்கள்.
இவைதவிர, சல்மான் ஜோடியாக நடிக்கக் கேட்டும் அசினை அணுகியிருக்கிறார்கள்.
மூன்றுமே பெரிய வாய்ப்புகள் என்ற போதிலும், எதற்கும் இதுவரை தனது சம்மதத்தை தெரிவிக்கவில்லையாம் அசின்.
'கஜினி' வெளிவந்த பிறகு, தீபிகா படுகோன் போல பிரபலமாகி, ஒரே படத்தில் கோடியில் சம்பளம் கேட்கலாம் என காத்திருக்கிறாராம்.
|