ஷாருக்கான் சினிமாவில் புகைப் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் அன்புமணி ஒருபக்கம் நெருக்குகிறார். மறுபுறம் உத்திரப் பிரதேசத்தில் சொத்து வாங்கிக் குவிக்கும் அமிதாப்பச்சன் மகாராஷ்டிர மாநிலத்தை புறக்கணிக்கிறார் என அவர் வீட்டை ராஜ்தாக்க ரேயின் ரவுடிகள் கல்லால் அடிக்கிறார்கள்.
அத்துடன் அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் 'ஜோதா அக்பர்' படத்துக்கும் மிரட்டல் வந்துள்ளது.
'லகான்' இயக்குனர் இயக்கியிருக்கும் 'ஜோதா அக்பர்' பிப்.15 திரைக்கு வருகிறது. அக்பருக்கும் ஜோதா என்ற ராஜபுதன மகாராணிக்கும் இடையில் மலர்ந்த காதல்தான் கதை. ராஜஸ்தான் ராஜ்புத் வம்சத்தினரோ, அக்பர் ஜோதாவை காதலிக்கவில்லை என்பதுடன் ஜோதா என்ற ராணியே கிடையாது, இந்தப் படம் எங்கள் பாரம்பரியத்தை கேவலப்படுத்துகிறது என ஆர்ப்பாட்டம், போஸ்டர் எரிப்பு என கலவரத்தில் இறங்கி உள்ளனர்.
இந்த தொடர் தாக்குதல்களால் பதறிப் போயிருக்கிறது பாலிவுட்.
|