சென்னையில் இயங்கிவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழி நடிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனாலும், தமிழ் தவிர பிறமொழி நடிகர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் தனித்தனி நடிகர் சங்கங்கள் உள்ளன. மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தால் பிறமொழி கலைஞர்களை கட்டுப்படுத்தமுடியாது.
இந்த காரணங்களால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றி வைக்கும்படி பலகாலமாகவே கோரிக்கை இருந்து வருகிறது.
சமீபத்தில் விழா ஒன்றில் போசிய நடிகர் சங்க செயலர் ராதாரவி, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர் விரைவில் தமிழ் நடிகர் சங்கம் என மாற்றி அமைக்கப்படும் என்றார்.
பெயர் மாற்றத்தில் சட்ட சிக்கல்கள் இருப்பதால், தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை சிறிதாக எழுதி, அருகில் தமிழ் நடிகர் சங்கம் என்பதை பெரிதாக எழுதி தற்காலிகமாக செயல்பட இருப்பதாக ராதாரவி கூறினார்.
தமிழ் இடம் பெறுவதால் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். முதல்வரின் ஆதரவும் கிடைக்கும்!
|