இயக்குனர் மதுரவனின் 'பாண்டி' படத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். இவருக்கு ஜோடி சினேகா. படத்தில் நமீதாவும் உண்டு.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இதில் ரீ-மிக்ஸ் பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதற்காக மதுரவன் தேர்ந்தெடுத்திருப்பது ரஜினி படப்பாடலை.
'தர்மதுரை' படத்தில் ரஜினி, கவுதமி ஆடிப்பாடும் 'மாசி மாசம் ஆளானப் பொண்ணு' பாடலைதான் ரீ-மிக்ஸ் செய்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. இளையராஜா இசையமைத்த பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நேமிசந்த் ஜெபக், இதேஷ் ஜெபக் தயாரிக்கும் 'பாண்டி'யில் இன்னொரு விசேஷம் அதன் இயக்குனர் மதுரவன் . பாண்டிக்காக தனது பெயரை கதாக மதுரவன் என மாற்றினார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் கதாக மதுரவன், ராசி மதுரவனாக மாறியிருக்கிறார்.
பட ரிலீஸின்போது, இயக்குனர் இடத்தில் அதிர்ஷ்ட மதுரவன் என்ற பெயரைப் பார்த்தால், அதிர்ச்சிடயடையாதீர்கள். மதுரவனின் பெயர் அப்படி மாறவும் வாய்ப்புள்ளது.
|