1980-ல் ரஜினி நடிப்பில் வெளியான 'பில்லா'வின் ரீ-மேக்கான இது, அதன் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்காக பாராட்டப்பட்டது. உள்ளூர் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற புதிய 'பில்லா' உலக ரசிகர்களின் பாரவைக்கு செல்கிறது.
பிரான்ஸில் வருடம்தோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட 'பில்லா' தேர்வாகியுள்ளது. இதற்குமுன் 'வெயில்', 'மொழி', 'பருத்திவீரன்' படங்களுக்கு இந்த கவுரவம் கிடைத்தது. அஜித் படமொன்று கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்படுவது இதுவே முதன்முறை.
இந்த மாதம் பதினெட்டாம் தேதி கேன்ஸில் 'பில்லா' திரையிடப்படுகிறது. இது போட்டிப் பிரிவு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கேன்ஸில் ஒருபடம் திரையிடப்படுவது மிகப்பெரிய கவுரவம். இதனை நேரில் அனுபவிக்க படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் கேன்ஸ் செல்ல உள்ளார்.
அஜித் கேன்ஸ் படவிழாவில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.
|