இந்த எல்லை பாகுபாட்டில் அவர் இவர் என்ற பாகுபாடில்லை. எல்லோரிடமும் உண்டு இந்த பாரபட்சம். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் மீரா ஜாஸ்மின், 'நேபாளி' படத்தில் பரத்துடன் கொஞ்சம் அதிகம் மூக்கோடு மூக்கு உரசியதற்கே, மீரா ஜாஸ்மின் தாராளம் என தமுக்கடித்தன தமிழக ஊடகங்கள். தெலுங்குப் படத்தில் அவர் போட்டிருக்கும் கெட்ட ஆட்டம் பார்த்தால் அவ்வளவுதான், மூர்ச்சையாகி விடுவார்கள்.
அது என்ன கெட்ட ஆட்டம் என எச்சிலூற கேட்பவர்களுக்காக படத்தின் கதைச்சுருக்கம் கீழே.
ஜெகஜால இளவரசன் ஒருவன் இந்திரனுக்கு தெரியாமல், இந்திரலோகத்து நாட்டிய மங்கைகள் ரம்பா, மேனகா, ஊர்வசி மூவரையும் லவட்டிச் சென்றுவிடுகிறான். இதுபோதாது என்று பூலோகத்தில் கேபரே நடனமாடும் ரீமாசென் மீதும் மையல் கொள்கிறான்.
மலருக்கு மலர் தாவும் இந்த மன்மத இளவரசனின் வலையில் பூலோகப் பெண் மீரா ஜாஸ்மினும் மாட்டிக் கொள்கிறார்.
இப்படி படம் நெடுக பழம் நழுவி பாலில் விழும் காட்சிகள் ஏராளம் பிளஸ் தாராளம். ரீமா சென், மீரா ஜாஸ்மின் இணைந்து ஆடும் பாடலுக்கு மட்டும் மொத்தம் 32 'கட்'கள் கொடுத்திருக்கிறது சென்சார் என்றால், பாடலின் தரத்தையும், தாரளத்தையும் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இந்த ஜொள்ளு படத்தை இந்திரலோகத்து இளவரசன் என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஏசி யை மீறி வியர்க்கும் காட்சிகள் அதிகம் என்பதால் இதயம் பலவீனமானவர்கள் படத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.
|