டப்பிங் கண்டுபிடித்த பிறகு. தமிழ் என்று உச்சரிக்க தெரியாத நடிகைகளும், செந்தமிழ் பேசும் கேரக்டரில் சிரமமே இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஐம்பது படங்களில் நடித்தாலும் சொந்தமாக டப்பிங் பேசுவதில்லை.
மலையாள நடிகைகள் சில்ர இதற்கு நேர் எதிர். தகரக்குரலாக இருந்தாலும் நான்தான் டப்பிங் பேசுவேன் என அடம்பிடித்து நினைத்ததை சாதிக்கிறார்கள். நவ்யா நாயர், பாவனாவை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
'வால்மீகி' வடசென்னையில் நடக்கும் கதை. இதில் சென்னைதமிழ் பேசி நடிப்பதற்காக தமிழரான படத்தின் ஹீரோ அகிலே டியூஷன் எடுத்துக் கொண்டார் அப்படியிருக்க மீரா நந்தன் எப்படி, டப்பிங் பேசினார்?
நியாயமான கேள்வி, மீரா நந்தன் சினிமாவில் நடிக்க வரும்முன் ஆல்பங்களில் பாடிக்கொண்டிருந்தார். தமிழிலும் சில பக்தி ஆல்பங்களில் பாடியிருக்கிறார். அப்படி நடிக்க வருவதற்கு முன்பே தமிழ் பரிட்சயம். அதனால் வால்மீகியில் தடுமாறாமல் தமிழ் பேசி அசத்தியுள்ளார்.
வால்மீகியில் சின்னக் குழந்தைகளுக்கு ப்ளே ஸ்கூல் நடத்தும் டீச்சராக வருகிறார் மீரா நந்தன்.
|