தனது படம் தொடங்குவதற்கு முன்பும், ரிலீஸான பின்பும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பதை வழக்கமாக்கியிருக்கிறார் ரஜினி. குசேலன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை தொடர்ந்து சாமி தரிசனத்துக்காக ரஜினி திருப்பதி வந்தார். சாமி தரிசனம் முடிந்த பிறகு அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்.
கன்னடர்களிடம் வருத்தம் தெரிவி்த்த விவகாரத்தை கவனமாக தவிர்த்த ரஜினி குசேலனும் அதன் தெலுங்கு பதிப்பான 'கதாநாயகடு'வும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் ஏற்கனவே வேண்டிக் கொண்டபடி திருப்பதி வந்ததாக கூறினார்.
அமெரிக்காவில் பத்தாம் தேதி முதல் 'ரோபோ' படப்பிடிப்பு தொடங்கயிருப்பதையும், அதில் கலந்து கொள்வதற்காக இன்னும் சில தினங்களில் அமெரிக்கா செல்லவிருப்பதையும் அப்போது பகிர்ந்து கொண்டார் அவர்.
சிவாஜி வெளியான பிறகு திருப்பதி வந்த ரஜினியிடம் காணப்பட்ட உற்சாகம் இப்போது இல்லை என்பது அவரை பார்த்தவர்களின் எண்ணம். அமெரிக்காவில் ஐஸ்வர்யா ராய் உடனான பாடல் காட்சியை முதலில் எடுக்கயிருப்பதாக கூறப்படுவது உண்மையா என்ற கேள்விக்கு, அது டைரக்டரின் சாய்ஸ் என்று கூறி காரில் ஏறி கிளம்பினார் ரஜினி.
|