தள்ளிப்போகும் கமல் படம்
- 05.11.2008
By JBR
கமல் இயக்கி நடிக்கும் சரித்திரப் படமான 'மர்மயோகி' படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
|
|
|
தசாவதாரத்திற்குப் பிறகு கமல் நடிக்கும் படம் 'மர்மயோகி'. படத்தை கமலே இயக்கி நடிக்கிறார். சரித்திரப் படமான இதில் நடிக்க த்ரிஷா, ஸ்ரேயா, ஹேமமாலினி, வையாபுரி, ஷோபனா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஹைதரபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புக்காக பிரமாண்ட அரங்குகள் போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார் கமல்.
'மர்மயோகி' படத்தை முதலில் பிரமிட் சாய்மீரா தயாரிப்பதாக சொல்லப்பட்டது. பட்ஜெட் அதிகமாக இருப்பதால் அவர்கள் படத்தை தயாரிக்க தயக்கம் காட்டுவதாக வந்த தகவலை கமல், பிரமிட் சாய்மீரா இரு தரப்புமே மறுத்தது.
ஆனாலும் படத்தை யார் தயாரிக்கிறார்கள் என்பதில் சிக்கல் இருந்து வந்தது. ஜெமினி லேப் படத்தை தயாரிக்க முன் வந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு தள்ளிப் போக தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட அதிருப்திதான் காரணம் என கூறப்படுகிறது.
இந்த திடீரி சிக்கல் காரணமாக மர்மயோகிக்கு கொடுத்த கால்ஷீட்டை இந்திப் படத்துக்கு கொடுத்துள்ளார் ஸ்ரேயா.
|