'அள்ளித்தந்த வானம்' படத்தை இயக்கிய விஜி இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகராக இதில் தோன்றும் பிரகாஷ்ராஜ் ரஜினியை படத்தில் விமர்சித்திருப்பதாக செய்தி வெளியானது.
இதனை மறுத்த விஜி, அப்படி எந்தக் காட்சியும் 'வெள்ளித்திரை' படத்தில் இல்லை என்றார்.
பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ் இருவரும் தங்களின் பழைய உடைகளையே படத்தில் பயன்படுத்தியுள்ளனர். படத்தில் இருவரும் வறுமையில் உழன்று சினிமாவில் வாய்ப்பு தேடுவதாக வருகிறது. இந்தக் காட்சிகளில் அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய உடைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என விஜி சொல்ல அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் தங்கள் பழைய உடைகளை அணிந்து நடித்துள்ளனர்.
விஜியின் இந்த திட்டத்தால் படத்தின் ஒரிஜினாலிட்டி கூடியிருப்பதுடன், பட்ஜெட்டிலும் செலவு மிச்சம்.
அடுத்து விஜிக்கு படம் கொடுக்கப் போகும் அதிர்ஷ்டசாலி தயாரிப்பாளர் யாரோ!
|