இந்த மூன்றில் இரண்டு படங்களை அசோக் கே.கோத்வானியின் ANKK மூவிஸ் தயாரிக்கிறது.
'கோவில்பட்டி வீரலட்சுமி' படத்தின் இயக்குனர் கே.ராஜேஷ்வர் ANKK மூவிசுக்காக 'இந்திரவிழா' படத்தை இயக்குகிறார். நமீதா, மாளவிகா இருவரும் இதில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
இன்னொரு படத்தை பாலுமகேந்திரா இயக்குகிறார். 'அனல் காற்று' என்ற அப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.
இவை தவிர ஸ்ரீஹரி இயக்கத்தில் ஷங்கர் வி.ராஜன் தயாரிக்கும் 'கார்த்தி்க் அனிதா' படமும் இன்று தனது படப்பிடிப்பை தொடங்குகிறது. இதில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
|