குசேலனில் நடிகர் பசுபதி ஏழை சவரத் தொழிலாளியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க சிம்ரனிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. அவர் மறுக்க, இந்தி நடிகை தபுவை நடிக்க வைக்க முயன்றனர். இந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.
மலையாளப் படத்தில் பசுபதி வேடத்தில் சீனிவாசன் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்தவர் மீனா.
வேறு நடிகைகள் மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடிக்க முன் வராததால், மலையாளத்தில் நடித்த மீனாவையே தமிழிலும் நடிக்க வைக்க உள்ளனர்.
இதற்காக மீனாவிடம் பேசி கால்ஷீட் வாங்கிவிட்டதாக இயக்குனர் பி.வாசு தெரிவித்தார். விரைவில் 'குசேலன்' படப்பிடிப்பு தொடங்குகிறது.
|