அரசியலில் குதிப்பேன் - நடிகர் அறிவிப்பு
- 06.02.2008
By JBR
பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ராஜசேகர், அரசியல் கட்சியில் இணைவேன் என பெரிய குண்டாக தூக்கிப் போட்டார்.
|
|
|
சில நாட்கள் முன்பு, சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவமில்லை என பேட்டி கொடுத்தார் ராஜசேகர். இதில் கோபமான சிரஞ்சீவி ரசிகர்கள் ராஜசேகரின் கார்மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்தச் சம்பவம் ராஜசேகரை கடுமையாக பாதித்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு பிறந்தநாள் கொண்டாடிய ராஜசேகர், எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. என்னை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சியில் இணைவேன் என்று அறிவித்தார்.
அரசியல் அனுபவம் சிரஞ்சீவிக்கு இல்லை என்று சொன்ன ராஜசேகருக்கு அந்த அனுபவம் உண்டா?
இதற்கு, நான் சின்ன வயதில் என்.எஸ்.எஸ்.சில் நாட்டுப் பணி செய்திருக்கிறேன், ப்ளுகிராஸில் மெம்பராக இருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
நாய்க்கு சோறு வைப்பதும், நாட்டை ஆளுவதும் ஒன்றா? நல்ல அரசியல் அனுபவம் போங்க!
|