ஹீரோ மாற்றம், தயாரிப்பாளருடன் டிஸ்யூம் என படம் ஆரம்பிப்பதற்கு முன்பே பலவித தடுமாற்றத்திற்கு உள்ளாகி பரபரப்பை ஏற்படுத்தியது பாலாவின் 'நான் கடவுள்.'
ஒரு வழியாக பஞ்சாயத்துக்கள் தீர்க்கப்பட்டு காசிக்கு ஷுட்டிங் போனார் பாலா. இரண்டு வார காலம் நான்ஸ்டாப்பாக போய்க்கொண்டிருந்த படப்பிடிப்புக்கு மீண்டும் ஒரு பிரச்சனை நங்கூரம் போட்டுள்ளது.
படப்பிடிப்பு நின்றதால் நாயகன் ஆர்யா, வீட்டில் உட்கார்ந்து பாலாவின் போனுக்காக காத்திருக்கிறாராம். நாயகி பாவனாவும், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனும் வேறொரு படத்துக்கு கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளானர்.
பாலா என்ன செய்கிறார்?
அறநிலைய துறைக்கு தினமும் நடையாய் நடந்துகொண்டிருக்கிறாராம். ஏன்?
'நான் கடவுள்' படப்பிடிப்புக்கான லொகேஷன் காசி மட்டுமல்லாது பழனி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இந்து கோயில்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சரி சட்டுபுட்டுனு அனுமதி வாங்கி ஷுட்டிங் நடத்த வேண்டியதுதானே என்கிறீர்களா? அங்கேதான் பாலாவுக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் சன்.டி.விக்கு எதிராகவும், திமுகவை விமர்சிப்பதுபோலவும் ஜெயா டிவியில் பேட்டிக் கொடுத்தார் பாலா.
இதை இன்னுமும் மறக்காத திமுக, சரியான தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறதாம்.
இப்போது படப்பிடிப்பு நடத்த அறநிலையைத்துறை மற்றும் செய்தி விளம்பரத்துறையின் அனுமதி பாலாவுக்கு தேவைப்படுகிறது. அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பித்துள்ளார் பாலா.
ம்ஹும்... குப்பன் சுப்பன் கோப்புகளெல்லாம் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் நகர பாலாவின் ஃபைல் ஆமை வேகத்தில் நகர்கிறதாம்.
|