'நான் கடவுள்' படத்துக்காக நீண்ட தலைமுடி, நெஞ்சுவரை தாடி என ஆளே மாறிப்போன ஆர்யா மீண்டும் க்ளீன் ஷேவ் முகத்துக்கு திரும்பியிருக்கிறார்.
கடந்த இரண்டு வருடமாக முடிக்குள் மறைத்து வைத்திருந்த முகத்தை வெளிகாட்ட இப்போதுதான் அனுமதி கொடுத்திருக்கிறார் பாலா. கன்னத்தில் பிளேடு பட்ட சந்தோஷத்தில் தனது வீட்டில் பிரியாணி விருந்து கொடுத்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் ஆர்யா.
நான் கடவுளில் ஆர்யாவின் பகுதிகள் முடிந்துவிட்டதால் இப்போது விஷ்ணுவர்தனின் 'சர்வம்' படத்தில் நடித்து வருகிறார். இதில் 'உள்ளம் கேட்குமே' படத்தில் வந்த மாதிரி இளமையான தோற்றம். இதற்காக முடியை குறைத்து மீசையை எடுத்திருக்கிறார்.
'சர்வம்' படத்தில் ஆர்யா ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார்.
|