'மிருகம்' படப்பிடிப்பில் நடிகை பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்ததற்காக மன்னிப்பு கேட்டார் சாமி. மேலும் அவர் படம் இயக்க ஒருவருடம் தடை விதிக்கப்பட்டது.
புதிய படத்திற்கான கதை மற்றும் ஸ்கிரிப்ட் வேலையில் பிஸியாக இருந்த சாமி, தன்மீதான தடையை நீக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு கோரிக்கை வைத்தார், கடிதமும் எழுதினார். முக்கியமாக 'சரித்திரம்' என்ற படத்தை ராஜ்கிரண், ஆதியை வைத்து எடுக்க இருப்பதாகவும், தயாரிப்பாளர் படத்தை தொடங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து ஆலோசனை நடத்திய திரையுலக நடவடிக்கைக்குழு ஆறு மாதத்திலேயே சாமி மீதான தடையை விலக்கிக் கொண்டது.
ஆறுமாத தடையே போதும் என கருத்து தெரிவித்த நடவடிக்கைக்குழு, படப்பிடிப்பு தொடங்கினால் சினிமா தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என தடை நீக்கத்திற்கான காரணத்தை கூறியது.
|