'வட்டாரம்' படத்துக்குப் பிறகு வகையான வாய்ப்புகள் ஏதும் கீரத்திற்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அர்ஜூனுடன் ஜோடியாக நடிக்க 'துரை' வாய்ப்பு கீரத்தை தேடி வந்தது.
பத்மப்ரியாவுக்குப் பதில் 'துரை'யில் கீரத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே கீரத்துக்கு ஷாக்! இன்னொரு ஹீரோயினாக படத்துக்குள் நுழைந்தார் கஜாலா.
இந்நிலையில் வெளியானது ஜெயம்ரவியின் 'சந்தோஷ் சுப்ரமணியம்'. இதில் விஜயகுமாரின் மகளாக சின்ன வேடம் ஒன்றில் நடித்திருந்தார் கீரத். அவரின் இந்த துக்கடா வேடம் பார்த்து அதிர்ந்துபோன இய்ககுனர் ஏ.வெங்கடேஷன் கீரத்தின் போர்ஷனை குறைத்து கஜாலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து 'துரை'யை எடுத்து வருகிறாராம்.
கைக்கு எட்டிய வாய்ப்பும் இப்படி கஜாலாவுக்கு சாதகமாகப் போனதால் பெரும் கவலையில் இருக்கிறார் கீரத்.
|