தசாவதாரத்தின் ஏரியா விற்பனை
- 06.05.2008
By JBR
ஜூன் மாதம் திரைக்கு வருகிறது, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொணடிருக்கிற 'தசாவதாரம்'.
|
|
|
ஐம்பது கோடி ரூபாய் செலவில் தயாராகி இருக்கும் கமலின் இந்தப் படம் தென்னிந்திய மொழிகளில் தயாரான படங்களில் அதிக பொருட்செலவில் எடுத்த படமாகும்.
பெரிய படஜெட் என்றாலும், படம் வெளியாகும் முன்பே போட்ட பணத்தை தயாரிப்பாளர் எடுத்துவிடுவார் என்கிறார்கள். அதற்கேற்ப 'தசாவதாரம்' ஏரியா விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
வட,தென் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை நகரம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விநியோக உரிமை பதினைந்து கோடிகளுக்கு விற்பனையாகி உள்ளதாம். மதுரை ஏரியா மூன்று கோடி, கோயம்புத்தூர் நான்கு கோடி, சேலம் இரண்டரை கோடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி ஒன்றரை கோடி, திருச்சி தஞ்சை இரண்டரை கோடி என மெகா விலைக்கு விற்பனையாகி உள்ளது. கன்னட உரிமை மட்டும் ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சத்திற்கு விற்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
'தசாவதாரம்' இந்தியிலும வெளியாகிறது. இந்தி உரிமை மட்டும் 12 கோடிகளுக்கு விற்பனையாகி சாதனைப் படைத்திருக்கிறது.
|