சென்ற வருடம் தனது பிறந்த நாளை நட்சத்திர விடுதியில் நணபர்களுடன் கொண்டாடினாராம் லட்சுமி ராய். இந்தமுறை நடசத்திர விடுதிகளை தேடிப்போகாமல் வளசரவாக்த்திலுள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான காப்பகத்திற்கு வந்தார் லட்சுமி ராய். அங்குள்ள குழந்தைகளின் நடுவே தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
லட்சுமி ராயின் பிறந்தநாளுக்கு அவரது பெற்றோர் பத்தொன்பது பூக்களை பரிசாக அளித்தனர். காரணம், லட்சுமி ராய்க்கு இது பத்தொன்பதாவது பிறந்தநாளாம்.(பார்த்தால் அப்படி தெரியலையே!)
பத்திரிகையாளர்களை சந்தித்த லட்சுமிராய், இதுவரை தான் நடித்த படங்களின் கதைகள் எதுவும் திருப்தியாக இல்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டார். அதேநேரம், இந்த வருடம் வெளியாகும் அனைத்துப் படங்களும் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்றார்.
ராயின் பிறந்தநாள் நம்பிக்கை பலிக்க நமது வாழ்த்துக்கள்!
|