'தசாவதாரம்' படத்தில் சைவ, வைணவ மோதல்கள் இடம்பெற்றுள்ளன. வைணவரான நம்பி சிவனை வணங்க மறுப்பதால், மன்னனின் கட்டளைப்படி விஷ்ணு சிலையுடன் நம்பி பிணைக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கும் காட்சி பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. சைவ, வைணவ மோதலில் கோயில் சிலைகள் சேதமடைந்த வரலாற்று உண்மையும் இதில் இடம் பெறுகிறதாம்.
இதற்கு இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தக்காட்சி இந்து சமூகத்தை பலவீனப்படுத்தும் என்று கூறியிருப்பவர், குறிப்பிட்ட காட்சியை நீக்காவிட்டால் தசாவதாரம் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என மிரட்டியுள்ளார்.
தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு மல்லிகா ஷெராவத் கவர்ச்சி உடையில் வந்ததற்கும் இந்தக் காவி துறவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் ரசிகர்களை விட எதிரிகள்தான் கமல் படத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள்
|