நரேனுக்கு தமிழில் முதல்படம் சித்திரம் பேசுதடி. 4 ஸ்டூடன்ஸ் படத்தில் சிறிய வேடத்தில் வந்தாலும் சித்திரம் பேசுதடியே ஹீரோவாக முதல் படம். அப்போதே என்வழி ஆக்ஷ்ன் வழி என்று, அடிதடி கதைகளுக்கு மட்டுமே செவிகொடுத்தார்.
தமிழில் நரேன் நடித்த மூன்று படங்களுமே ஆக்ஷ்ன் படங்களாக அமைந்தது ஏதேச்சையாக நடந்தது அல்ல. அவர் விரும்பி ஏற்றுக் கொண்டவை.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் சிவகுமார் கூறிய கதை நரேனுக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது கொள்கைப்படி அது முழுக்க ஆக்ஷ்ன் கதையல்ல. பட்ததின் ஹீரோ ஹியூமர் சென்ஸ் உள்ள நல்லவன். கதை நடப்பது மதுரை பின்னணியில். கண்டிப்பாக மதுரை பாஷைதான் பேசியாக வேண்டும். நரேனோ தனக்குப் பதில் வேறொருவர் டப்பிங் பேசுவதை விரும்பாதவர்.
இத்தனை எதிர்மறை சமாச்சாரங்களையும் மீறி, அப்படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். 'பூக்கடை ரவி' என்ற அந்தப் படத்துக்காக தற்போது மதுரை தமிழை தீவிரமாக கற்று வருகிறார். நரேன் ஹியூமர் கலந்த நடிப்பை வெளிப்படுத்தப்போவது தமிழில் இது முதல் முறை என்றாலும், அவருக்கு இந்த வேடம் புதிதல்ல. மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடின் 'அச்சுவின்டே அம்மா' படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடித்திருக்கிறார் நரேன்.
|