பி.சி.ஸ்ரீராம், மணிரத்னம் இருவரும்தான் கிருஷ்ணனின் திறமையை வளர்த்த குருக்கள். சந்தோஷ்சிவனுடன் இணைந்து பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளவர், முதல் முறையாக வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கிறார்.
"படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி முடிந்ததும் மீண்டும் ஆரம்பம் முதல் படத்தை பார்க்க வேண்டும் என ஆவலை தூண்டும் திரைக்கதை என்பதால் படத்தின் தலைப்பை அவ்வாறு வைத்தேன்" என டைட்டிலுக்கு விளக்கம் தருகிறார் கிருஷ்ணன்.
இதுவரை யாரும் கையாளாத புதிய தொழில்நுட்பத்தில் படம் எடுத்துள்ளதாக கூறும் கிருஷ்ணன், "படத்தில் நடித்திருக்கும் நடிகர்-நடிகைகளின் எண்ணிக்கை மொத்தம் நூறு" என சொல்லும்போதே கிர்... என்கிறது. 14 முதல் 40 வயது வரையிலான ரசிகர்களை குறிவைத்துள்ள இப்படத்தின் சிறப்பு காட்சியை மணிரத்னம் பார்த்துவிட்டு கிருஷ்ணனை கட்டிப்பிடித்து பாராட்டினாராம். படத்தின் டிரைலரை பார்த்த விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்தை வாங்குவது தொடர்பாக போட்டியே நடந்து வருகிறதாம்.
ஆப்பிரிக்கர் ஒருவரையும் இங்கிலாந்தில் டாக்டர் பட்டம் பெற்ற தீவ்னா என்ற பெண்ணையும் ஒரு பாடல் காட்சியில் நடனமாட வைத்துள்ளாராம். ஒளிப்பதிவிலும் இப்படம் புதிய டிரண்ட் செட்டாக அமையும் என உறுதியளிக்கும் கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்!
|