தெலுங்கில் 'பருத்திவீரன்'
- 06.09.2008
By JBR
பார்த்தால் நடிக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றும் படம் 'பரு்ததிவீரன்'.
|
|
|
தெலுங்கு நடிகர் விஷ்ணுவுக்கு தோன்றியதில் ஆச்சரியமில்லை விஷ்ணு ரஜினியின் நண்பர் தெலுங்கின் பாக்ஸ் ஆபிஸ் நாயகர் மோகன்பாபுவின் மூத்தமகன்.
இளையமகனை தமிழில் அறிமுகப்படுத்த சென்னை வந்து, ரஜினியை ஒருமையில் அழைத்து அனைவரையும் அதிரவைத்த அதே மோகன்பாபுவின் மகன்.
சமீபகாலமாக தெலுங்கு படங்களே அதிகமாக தமிழில் ரீ-மேக் செய்யப்படுகின்றன. 'போக்கரி', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'யாரடி நீ மோகினி', 'தீ' என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆர்யா, விக்ரமாதித்திடு உள்பட அரைடஜன் படங்கள் தமிழில் ரீ-மேக் செய்ய கியூ நிற்கின்றன.
இந்த சூழலில் ஒரு தமிழ்ப் படம் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்படுவது ஒலிம்பிக்கில் ஆறுதல் பரிசு கிடைப்பதற்கு சமம்.
'பருத்தி வீரனி'ன் ஆன்மா அதன் மனிதர்கள், தொழில்நுட்ப ஆன்மா கேமராவும், எடிட்டிங்கும், இரண்டையும் ஆந்திரா காரம் சிதைக்காமல் இருக்க வேண்டும்.
|