சிறிய முதலீட்டில் தயாராகும் படங்களுக்கு பல சிக்கல்கள். திரையரங்குகள் கிடைக்காதது அதில் முக்கியமானது. தீபாவளிக்கு கொத்தாக படங்கள் வெளியாகும் என்பதால் தற்போது திரையரங்குகள் காலியாக உள்ளன. சிறு படங்களின் தயாரிப்பாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் இது ஆபத்தானது என்பது பலரது கணிப்பு.
இதுபற்றி கருத்து தெரிவித்த விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், மக்கள் தீபாவளிக்கு தங்களது பர்சேஸிங்கில்தான் கவனமாக இருப்பார்கள். திரையரங்குக்கு வரமாட்டார்கள். அதனால் சின்ன பட்ஜெட் படங்களை இப்போது வெளியிட்டால் நஷ்டமே ஏற்படும். தவிர தீபாவளிக்கு வெளியாகும் பெரிய படங்களுக்காக சின்ன படங்களை அவை நன்றாக ஓடினாலும் தியேட்டரை விட்டு தூக்கிவிடுவார்கள் என்று கூறினார்.
இதனால் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் கலக்கமடைந்து உள்ளனர். தீபாவளிக்கு 'வாரணம் ஆயிரம்', 'சேவல்', 'குரு என் ஆளு' போன்ற முக்கியமான படங்கள் வெளியாவதால் சிறு தயாரிப்பாளர்கள் உண்மையிலேயே கலக்கமடைந்துள்ளனர்.
|