முக்கியமாக எது தமிழ்ப் பெயர், எது வடமொழிப் பெயர், எது ஆங்கிலப் பெயர் என்பதில் இன்னமும் தகராறு.
24 மணிநேரமும் தமிழ், தாய்மண் என ரத்தக் கொதிப்புடன் இருக்கும் சீமானே தனது படத்துக்கு 'க்' கன்னாவை சேர்த்து 'வாழ்த்துக்கள்' என்று பெயர் வைக்கும்போது மற்றவர்களைப்பற்றி சொல்ல வேண்டுமா.
புதுமுகம் செம்பி நடித்திருக்கும் 'ஆலயம்' படம் விரைவில் தணிக்கைக்கு செல்ல உள்ளது. இதுவரை படக்குழுவினர் 'ஆலயம்' தமிழ்ச்சொல் என்றே நினைத்திருந்தனர். பட வேலைகள் முடிந்த நிலையில் இப்போதுதான் 'ஆலயம்' வடமொழிச்சொல் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது.
இதனால், வரிச்சலுகை கிடைக்குமா என தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இதேபோன்று சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.கண்ணன் இயக்கும் படத்துக்கு 'ஜெயம் கொண்டான்' என பெயர் வைத்துள்ளனர். இதில் கொண்டான் மட்டுமே தமிழ். ஜெயம் தமிழல்ல. வெற்றிதான் சரியான தமிழ்ச்சொல்.
சத்யஜோதியின் முந்தையப் படமான 'எம்டன் மகன்' இதே பெயர் குழப்பத்தால் 'எம் மகன்' என சுருங்கியது.
ஜெயம் கொண்டான், கொண்டான் என்று சுருங்கினால் நன்றாகவா இருக்கும்?
|