"சாதுமிரண்டா இமேஜை மாற்றும்" - பிரசன்னா
- 07.02.2008
By JBR
நாளை பிரசன்னா நடித்த 'சாதுமிரண்டர்' வெளியாகிறது. மலையாள இயக்குனர் சித்திக்கின் மூன்றாவது தமிழ்ப்படம் இது
|
|
|
முதலிரண்டு படங்களை விஜய், விஜயகாந்த் என மாஸ் ஹீரோக்களை வைத்து எடுத்தவர் இதில் பிரசன்னாவை ஹீரோவாக்கியிருக்கிறார்.
பிரசன்னா என்றாலே, சாதுவான ஹீரோதான் கண்முன் தெரிவார். ஆனால், 'சாதுமிரண்டா' ஆக்ஷ்ன் படம். முதல்முறையாக படம் நெடுக ஆக்ஷ்ன் காட்சிகளில் நடித்துள்ளார் பிரசன்னா. "இந்தப் படம் வந்தால் எனது சாஃப்ட் இமேஜ் மாறும்" என்றார் நம்பிக்கையுடன்.
இந்த மாதம் பிரசன்னா முதல்முறையாக வில்லனாக நடித்திருக்கும் 'அஞ்சாதே' படம் வெளியாகிறது. படத்தின் சர்ப்ரைஸே பிரசன்னாவின் வில்லன் வேடம் தான் என்கிறார்கள்.
உண்மையாகவே பிரசன்னாவின் இமேஜ் மாறத்தான் போகிறது.
|