'சண்ட' யில் இவருக்கு இரண்டு வேடம். நாட்டாமை, நாட்டாமை மகன் இரு வேடங்களில் இரட்டை காமெடி செய்கிறார்.
சுந்தர் சி. படங்கள் என்றால் நவரசங்களில் நகைச்சுவை சற்று தூக்கலாகவே இருக்கும். 'தலைநகரம்' படத்துக்குப் பிறகு வடிவேலு சுந்தர் சி. யுடன் டூ விட்டதால் 'சண்ட'யில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள்.
படத்தின் பெயர் ஆக்ஷ்ன் தொனியுடன் இருந்தாலும் கதையே காமெடி களேபரமாகதான் இருக்குமாம். இதில் சுந்தர் சி. யின் அத்தையாக வருகிறார் நதியா. அதாவது இந்த அத்தை சுந்தர் சி. யின் அப்பாவின் உடன் பிறந்தவர்.
கவர்ச்சிக்காகவே நமிதாவை படத்தில் சேர்த்திருக்கிறார்கள். மொத்தத்தில் கதையை விட மற்ற இரு 'க' வையும் ரொம்பவே நம்பியிருக்கிறார்கள்.
|