இதில் முக்கியமான நிகழ்ச்சி சிவப்பு கம்பள வரவேற்பு. உலகின் முன்னணி கலைஞர்கள் சிவப்பு கம்பளத்தில் அணி வகுத்து வருவார்கள். இந்த பெருமை ஒருவருக்கு கிடைப்பது அரிதிலும் அரிது.
மடோனா, ஜூலியா ராபர்ட்ஸ், பென் கிங்ஸ்லி, பெனலோப் குரூஸ் என உலகின் டாப் வரிசை கலைஞர்களுடன் இந்தவருடம் சிவப்பு கம்பளத்தில் நடந்து வருகிறார் ஷாருக்கான்.
இவரது 'ஓம் சாந்தி ஓம்' படமும் இந்த திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. பாலிவுட்டின் பாப்புலர் ஸ்டார் என்ற வகையில் இந்த கவுரவம் அவருக்கு வழங்கப்படுகிறது.
திரைப்படவிழா நிர்வாகிகள் அனுப்பியுள்ள செய்தியில் ஷாருக்கை பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
'ஓம் சாந்தி ஓம்' அவருக்கு கோடிகளை தந்தது. இப்போது கவுரவத்தை. இது ஷாருக்கிற்கு அறுவடை காலம்!
|