விஜய்க்குச் சொன்ன 'புலி' கதை அவருக்குப் பிடிக்காமல் போக, அந்தக் கதையை அப்படியே தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து இயக்குகிறார் எஸ்.ஜே. சூர்யா. ஏ.ஆர். ரஹ்மான் இதற்கு இசையமைக்க ஏற்கனவே ஒத்துக் கொண்டுள்ளார்.
எஸ். ரமேஷ்பாபுவின் கனகரத்னா மூவிஸ் 'புலி'யை தயாரிக்கிறது. தெலுங்குப் படம் முடிந்ததும், அதேகதையே தமிழில் இயக்குகிறார் எஸ்.ஜே. சூர்யா.
தமிழ் 'புலி' யாக நடிக்க இருப்பது சாட்சாத் சூர்யாவேதான்! "பவன் எனது கடைசி ஹீரோ. இனி என்னைத் தவிர வேறு யாரையும் இயக்க மாட்டேன்" என சபதமே செய்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.
அடுத்த மாதம் தெலுங்கு 'புலி' க்கான வேலைகள் தொடங்குகின்றன.
|