நிஜ ஹீரோவான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அனிமேஷனில் உருவாக்கியிருக்கிறார் ஆபிரகாம் லிங்கன் என்பவர்.
தேவரின் கதையை எடுக்கப் போவதாக சிலர் முட்டிக் கொண்டது நினைவிருக்கும். அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
இந்நிலையில் 'பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வரலாறு' என்ற பெயரில் ஒன்றரை மணிநேரம் ஓடக்கூடிய படமொன்றை அபிரகாம் எடுத்துள்ளார். இதில் தேவர் கதாபாத்திரத்தை மட்டும் நடிகர்களை வைத்து எடுக்காமல் அனிமேஷனில் உருவாக்கியிருக்கிறார்.
ஒருபடத்தில் ஒரேயொரு கதாபாத்திரத்தை மட்டும் அனிமேஷனில் எடுத்திருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறையாக இருக்கும்.
|