இப்படம் வெற்றி பெற்றதால், தொடர்ந்து தமிழில் 'பார்வை ஒன்றே போதுமே', 'வருஷமெல்லாம் வசந்தம்', 'பேசாத கண்ணும் பேசுமே', 'அற்புதம்', 'திருடிய இதயத்தை', 'உணர்ச்சிகள்', 'நிலவினிலே' உட்பட ஏராளமான படங்களில் நடத்து, இளம் முன்னணி ஹீரோவாக வலம் வநதார்.மற்ற மொழிப் படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவந்தன.
ஆனால், தமிழில் புதுப்படம் எதுவும் ஒப்பந்தம் ஆகவில்லை. இதனால், மனம் வெறுத்துப் போன குணால், சென்னையில் தங்கியிருந்த வீட்டைக் காலி செய்தார். மீண்டும் மும்பையில் குடியேறினார்.அங்கு அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். குணாலின் தந்தையின் நண்பர் மகள் லவினா மாடல் அழகியான இவருடன் குணாலுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. லவினா இந்தி படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டதாகவும், அதில் குணால் நடிக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த குணாலின் வீட்டிற்கு லவினா அடிக்கடி வருவாராம்.
குணாலும், லவினாவும் பழகிய விதம் அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குணாலின் மனைவி கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு குணால் தனது வீட்டில் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நடந்த போது குணாலின் தோழியான லவினாவும் இருந்துள்ளார்.
குணால் தற்கொலை செய்து கொண்ட விஷயம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்களுக்கு தெரிந்ததும் போலீஸூக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, குணாலின் வீ்ட்டிலிருந்து லவினாவிடம் போலீஸ் அதிகாரி கதம் விசாரணை செய்தார்.
விசாரணையின் போதுதான் பாத்ரூமில் இருந்ததாகவும், குணால் தற்கொலை செய்தது தனக்கு தெரியாது என்றும் லவினா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:-
"நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பாத்ரூமிலிருந்து வெளியே வந்த போது குணால் தூக்கில் தொங்குவதை லவினா பார்த்திருக்கிறார். அதன் பிறகு அவர் தான் எங்களுக்கு தகவல் தெரிவித்தார். குணால் தற்கொலை செய்தற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து லவினா மீதும் சந்தேதகம் உள்ளதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவோம்" என்றார்.
போலீஸ் விசாரணையின் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும். என எதிர்பார்க்கப்படுகிறது.
|