சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் நேரடி இந்திப் படங்கள் நல்ல வசூலை பெற்று வருகின்றன. சமீபகாலமாக உலக அளவிலும் இந்திப் படங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்திப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. ஹிருத்திக்ரோஷன் சூப்பர் ஹீரோவாக நடித்த 'க்ரீஷ்' தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால், அதற்குப் பிறகு மொழிமாற்றம் செய்யப்பட்ட 'ஜோதா அக்பர்', 'ரேஸ்' இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருந்தும் மொழிமாற்றும் வேலைகள் நிற்பதாக இல்லை.
அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஜூஹிசாவ்லா நடித்த 'பூத்நாத்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இருபெரும் ஸ்டார்கள் நடித்திருக்கும் படம் என்பதால் 'பூதநாதன்' என்ற பெயரில் 'பூத்நாத்'தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர்.
அமிதாப், ஷாருக்கிற்கு தமிழ் வசனம் எழுதும் வேலைகள் தற்போது ஜரூராக நடந்து வருகிறதாம்.
|