அடிப்படையில் ஒளிப்பதிவாளரான நட்டு என்கிற நட்ராஜ் நடிகராக அறிமுகமான படம், 'நாளை'!. ரிச்சர்ட்டுடன் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த இந்தப் படத்தைத் தொடர்ந்து நட்ராஜ் ஷோலோ ஹீரோவாக சக்கர வியூகத்தில் நடித்திருக்கிறார்.
அடுத்து சபாபதி இயக்கத்தில் 'முழுநிலவு' படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக நடிக்க வித்யாபாலனுக்கு வலைவீசியிருக்கிறார் நட்ராஜ்.
தமிழ் படம் ஒன்றிற்காக போட்டோசெஷன் நடத்தி பிறகு தேறாது என்று திருப்பி அனுப்பப்பட்டவர் வித்யாபாலன். இந்த சம்பவத்திற்குப் பிறகு இந்திப் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். பழைய கசப்பான அனுபவத்தால் தமிழ்ப் படம் என்றாலே தமிழச்சியான வித்யாபாலனுக்கு வெறுப்பு. "இந்திப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தபோது வித்யாபாலன் எனக்கு நெருங்கிய தோழியானார். அதனால் நான் கேட்டால் கண்டிப்பாக கால்ஷீட் தருவார்" என நம்பிக்கையோடு பேசுகிறார் நட்ராஜ்.
வித்யாபாலன் விரோதம் மறந்து நட்ராஜின் நட்புக்கு மரியாதை தருவாரா?
|