'கனா கண்டேன்' படத்திற்குப் பிறகு ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் 'அயன்'. 'கனா கண்டேன்' படத்தின் கதை, வசனம்
எழுதிய சுபா அயனுக்கும் கதை, வசனம் எழுதியுள்ளார்.
சூர்யா, தமன்னா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரு தினங்களாக சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது.
திருவல்லிக்கேணியில் ஜாம் பஜாரில் உள்ள பழமையான வீட்டில் படப்பிடிப்பை நடத்தினார் கே.வி.ஆனந்த்.
கதைப்படி அந்த வீடு வில்லனுடையது. வில்லன் மற்றும் அவனது அடியாட்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாயின.
ஆக்ஷ்ன் படமான அயனின் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு போக உள்ளனர்.
|