ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ரோபோ' படத்தின் வேலைகள் அதிவேகமாக நடந்து வருகின்றன. ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். சுஜாதா திடீரென இயற்கை எய்தியதால் அவருக்குப்பதில் எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதுகிறார்.
ஷங்கரின் நான்கு அசிஸ்டெண்டுகளும், கம்யூட்டர் அனிமேஷன் தெரிந்த சிலரும் அனிமேஷன் பயிற்சி பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளனர்.
மிகுந்த பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் சக்ரவர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ராம்கோபால் வர்மாவின் 'உதயம்', இந்தி 'சத்யா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
வர்மாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கும் சக்ரவர்த்தி ஒரு படத்தையும் இயக்கியுள்ளார்.
ரஜினியின் முந்தைய படமான 'சிவாஜி'யில் வில்லன்தான் இறுதிவரை பிரச்சனையாக இருந்தது. 'ரோபோ'வில் அந்த தலைவலி இல்லை.
இதுவே 'ரோபோ'வுக்கான நல்ல சகுனம்தான்!
|