ஜி.கம்பெனி சார்பில் சங்கர் தயாரித்துள்ள படம் 'சிலந்தி'. ஆதி இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகன் முன்னா. கதாநாயகி மோனிகா. வில்லனாக சந்துரு நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் மோனிகாவிடம் அப்படி இப்படி நடந்துகொண்டதாக கதாநாயகன் முன்னா பற்றி ஏற்கனவே கசமுசா செய்தி ஒன்று பரவியது. அதனையடுத்து ஒரு பாடல் காட்சியில் மோனிகா மட்டுமே நடித்தார்.
இந்நிலையில் தன்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்புவதாக தயாரிப்பாளர் மீதும், இயக்குனர் மீதும் முன்னா புகார் கூறியிருந்தார். இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் சங்கரிடம் கேட்டபோது முன்னா பற்றி பொரிந்து தள்ளிவிட்டார். அவற்றிலிருந்து...
"முன்னாவை முழுமையான கதாநாயகனாக்கியதே 'சிலந்தி' படம்தான். நட்பின் அடிப்படையில்தான் இயக்குனர் ஆதி முன்னாவை கதாநாயகனாக்கினார். ஆனால், படம் ஆரம்பித்தபிறகு அவர் செய்த அலப்பரைகள் தாங்கவில்லை. தனக்கென்று தனியாக போட்டோகிராபர் வேண்டுமென்று அடம்பிடித்த முன்னா தினமும் காலையில் தன்னை போட்டோ எடுக்க சொல்வார். போட்டோவை பார்த்துவிட்டு நீயெல்லாம் ஒரு போட்டோகிராபரா என்று சைக்கோ மாதிரி திட்டி திட்டியே ஸ்டில் போட்டோகிராபரை விரட்டியடித்துவிட்டார்.
முன்னாவின் மனசில் கமலஹாசன் ரேஞ்சுக்கு தன்னை நினைத்துக்கொண்டு படப்பிடிப்பில் கொடுத்த குடைச்சல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. மோனிகா கிளாமராக நடித்த காட்சிகளை எடுத்தபோது இயக்குனர், கேமராமேன், ஒளிப்பதிவாளர் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டும், நாகரீகம் மறந்து மோனிகாவையே உற்றுப்பார்த்து கொண்டிருப்பதே முன்னாவின் வேலையாக இருந்தது.
மோனிகாவிடம் இரட்டை அர்த்தங்களில் பேசி அவரை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கினார். இதனால் சில நேரங்களில் படப்பிடிப்பு நடத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இப்படிபட்ட முன்னா தன்னை யோக்கியமானவனாக காட்டிக்கொள்ளும் முயற்சியே எங்களை பற்றி தவறாக சொன்னது" என கோடைவெயிலாய் கொதிக்கிறார் சங்கர்.
|