Home |  Cine Chance |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

இளையராஜா இசையில் ஹங்கேரி கலைஞர்கள் - படங்களுடன் செய்தி
07.10.2005

By: Amalan
ஓய்ந்து போய்விட்டார் என்று நினைத்திருந்த வேளையில் ஒவ்வொரு புதுமையாக செய்ய ஆரம்பித்துவிட்டார் இசைஞானி.

Ilayarja, Hungeri musicians, Barkis

சிம்பொனி, திருவாசகம், மூன்று ஸ்வரங்களில் மெட்டமைத்த பாடல் என இசை ப்ரியர்களுக்கு சங்கீத சாப்பாடு கொடுத்து வரும் இளையராஜா லேட்டஸ்டாக ஒரு விருந்து கொடுக்கவுள்ளார்.

நான்கு மொழிகளில் தயாராகும் 'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' என்ற படத்திற்கு ஹங்கேரியிலிருந்து இசைக் கலைஞர்களை வரவழைத்து வித்தியாசமான பின்னணி இசையை அமைத்துள்ளார்.

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் இதற்கான பணி நேற்று நடந்தது. இரு தடுப்பு கண்ணாடி கதவுகளை கடந்து உள்ளே போனோம்.

Ilayarja



வெள்ளை வேட்டி - ஜிப்பாவில், நோட்ஸ் பேடை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார் ராஜா. அவருக்கு முன்பாக இசைக்கருவிகளுடன் தயாராக இருந்தனர் ஹங்கேரி கலைஞர்கள்.

'ஓ.கே. டேக் போகலாம்....' என்றபடி கைகளை விரித்து இசைஞானி சைகை செய்ய, அவரது விரல் அசைவுகளுக்கு ஏற்றவாறு சுதி மீட்டதொடங்கினர் ஹங்கேரி கலைஞர்கள்.

கம்போஸிங் முடிந்ததும் நிருபர்களை சந்தித்த இளையராஜா படம் பற்றி கூறியதாவது:-

Ilayarja, Barkis

"அரவாணியாக மாறும் ஒரு சின்ன பையனை அதிலிருந்து மீட்பதுதான் படத்தின் கதை. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு வித்தியாசமான பின்னணி இசை தேவைப்பட்டது. இதற்காக சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து இசையமைக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதற்கு காலம் போதாததால் ஹங்கேரி இசைக்கலைஞர்களை வரவழைத்து இசையமைத்துள்ளேன்.

2 மணிநேரம் வரும் பின்னணி இசைக்காக மொத்தம் 5 நாட்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால், ஹங்கேரி கலைஞர்கள் எளிதாக புரிந்துக்கொண்டு வேகமாக செயல்பட்டதால் இரண்டே நாளில் இசைப்பதிவு முடிந்துவிட்டது.

Hungeri Musicians

புல்லாங்குழல், கிளாரிநெட், பேஸ் கிளாரி நெட் உள்ளிட்ட இசைக்கருவிகளை ஐந்து இசைக்கலைஞர்கள் வாசித்துள்ளனர்" என்ற ராஜாவின் முகத்தில் வேலை முடிந்த திருப்தி.

குழந்தைகளும் பார்த்து மகிழும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் டிசம்பர் மாதம் 2-ந் தேதி இந்தியா முழுவதும் வெளிவரவுள்ளது என்ற தகவலை தயாரிப்பாளர் பர்கீஸ் கூறினார்.









Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us