ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ரஜினியை புகழ்ந்து தள்ளினார் முன்னாள் உலக அழகி.
"ரஜினி எங்கள் குடும்ப நண்பர். அவர் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். எந்திரன் படப்பிடிப்பில் அவரது எளிமை என்னை வியக்க வைத்தது. ஆடம்பரமான சினிமா உலகத்தில் ரஜினி மாதிரி எளிமையான மனிதரை பார்ப்பது அபூர்வம். சூப்பர் ஸ்டார் என்ற பந்தா துளியும் இன்றி எல்லோரிடமும் சகஜமாக பழகுகிறார். அவர் எனக்கு ஒரு அதிசய மனிதராகவே தெரிந்தார்.
எந்திரனின் முதல்கட்ட படப்பிடிப்புதான் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அவருடன் நடிக்கும் போது அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வேன்" என்று கூறினார்.
'எந்திரன்' கதை பிடித்துதான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக பேட்டியின் போது கூறினார் ஐஸ்வர்யா ராய்.
|