'குருவி' யில் யோகியின் பாட்டு
- 08.02.2008
By JBR
மலேஷிய தமிழர் யோகியின் எங்கேயும் எப்போதும் ரீ-மிக்ஸ் சென்ற வருடப் பாடல்களில் முதலிடம் பிடித்தது தெரியும். அவர் விஜய் நடிக்கும் 'குருவி'க்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
|
|
|
இந்தப் பாடல் சென்னையில் படமாக்கப்பட்டது. விஜய்யுடன் சேர்ந்து யோகியும் இந்தப் பாடலுக்கு ஆடினார். பாடலுக்கு இசை வித்யாசாகர்.
தற்போது 'குருவி' யூனிட் சேலத்தில் உள்ளது. அங்கு விஜய் நடிக்கும் காட்சிகளை எடுக்கும் தரணி பிறகு தேனி செல்கிறார். அதனைத் தொடர்ந்து புனேயில் படப்பிடிப்பு நடத்தும் திட்டமும் தரணிக்கு இருக்கிறது.
விஜய், த்ரிஷா நடிக்கும் பாடல் காட்சிக்காக எந்த வெளிநாட்டுக்கு செல்வது என தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.
படத்தை வேகமாக முடித்து ஜூனில் திரைக்கு கொண்டுவர திட்டம் வைத்துள்ளார் தரணி.
|