சரண் இயக்கத்தில் வினய்
- 08.02.2008
By JBR
ஒருவழியாக கடனிலிருந்து மீண்டு, தனது பழைய இயக்குனர் வேலைக்கு திரும்பியிருக்கிறார் சரண்.
|
|
|
'வட்டாரம்', 'முனி' படங்களை தயாரித்து, சம்பாதித்ததை கோட்டைவிட்ட சரண், கோடிகளில் கடனும் வாங்கினார். இந்தக் கடனை தான் ஆசையாக வாங்கிய வீட்டை விற்று அடைத்திருக்கிறார்.
பிரச்சனைகள் ஓரளவு ஓய்ந்த நிலையில் புதுப்பட வாய்ப்பு ஒன்று சரணுக்கு கிடைத்துள்ளது.
'ஜீன்ஸ்' படத்தை தயாரித்த முரளிமனோகர் புதிய படமொன்றை தயாரிக்கிறார். சரண் படத்தை இயக்குகிறார். 'உன்னாலே உன்னாலே' ஹீரோ வினய் இதில் நாயகனாக நடிக்கிறார்.
பிற நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
|