லைட்மேன்களுக்கு வரிச்சலுகை
- 08.02.2008
By JBR
சினிமாவில் பிலிம் பிரச்சனையைவிட வரிப் பிரச்சனையே அதிகம்.
|
|
|
இதனைப் பேசித் தீர்க்க நேற்று பிலிம்சேம்பரில் கூட்டம் ஒன்று நடந்தது. தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களின் சந்தேகங்களுக்கு வருமான வரித்துறை ஆணையர் விளக்கமளித்தார். சினிமா லைட்மேன்கள் தினம் 200 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். மாதத்தில் பாதிநாள் இவர்களுக்கு வேலையிருப்பதில்லை. அதனால் இவர்களுக்கு டி.டி.எஸ். சிலிருந்து விலக்கு அளிக்க் வேண்டுமென்று சங்கங்கள் சார்பில் கோரப்பட்டது. அதனை ஆணையர் ஏற்றுக்கொண்டார். சினிமாவில் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
படம்தயாரித்து நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் சரியான கணக்கை சமர்ப்பித்தால் அவர்களுக்கும் வரிவிலக்கு அளிக்கபடும் என உறுதியளித்தார் ஆணையார்.
|