மீண்டும் ரஜினி படத்தில் விவேக்
- 08.02.2008
By JBR
ரஜினி படத்தில் ஒருவர் தொடர்ந்து இடம்பெறுவது அதிசயம்.
|
|
|
செந்தில், வினுசக்ரவர்த்தி, ஜனகராஜ், நாசர் என சிலருக்கு மட்டுமே இந்த அபூர்வம் கிடைத்திருக்கிறது. இந்த வரிசையில் விவேக்கும் இணைகிறார். 'சிவாஜி'யில் ரஜினிக்குப் பதில் பன்ச் டயலாக் பேசிய விவேக், ரஜினியின் குசேலனில் நடிக்கிறார். படத்தில் பசுபதிக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அதில் பிரதான நண்பர் வேடத்தில் விவேக் நடிக்க உள்ளார் என்கிறார்கள். வேறு சிலரோ, ரஜினியின் நண்பராக அவருடனே வரும் கேரக்டர் என்கிறார்கள்.
இதில் எது உண்மையாக இருந்தாலும், விவேக் நடிப்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. குசேலனில் முதலில் வடிவேலு நடிப்பதாகச் சொல்லப்பட்டது, திடீரென்று அவருக்குப் பதில் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டது கோடம்பாக்கத்தில் பல கேள்விகளை கிளப்பியுள்ளது.
|