ஹாலிவுட்டில் ஐஸ்வர்யாராய் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான படங்களில் நடித்துள்ளார். இப்போது ஷில்பா ஷெட்டிக்கும் அப்படியொரு வாய்ப்பு வாய்த்திருக்கிறது.
நாக்கு சுளிக்காமல் உச்சரியுங்கள் - அலேஜாண்ட்ரே கன்ஸால் வெஸ் இனாரிட் - இவர் ஹாலிவுட் இயக்குனர். 'பேபெல்' என்ற படத்தை இயக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார். இந்தப் படத்துக்காக ஷில்பா ஷெட்டியின் கால்ஷீட்டை வாங்கி வைத்திருக்கிறார் அலேஜா.... (மேலே உள்ள பெயரை இன்னொரு முறை படிக்கவும்!)
இந்தப் படத்தில் ஷில்பா ஷெட்டியுடன் நடிப்பவர், பலமுறை உலக ஆணழகன் பட்டியலில் முதலிடத்தை பிடித்த பிராட் பிட். இந்தப் பட்டியலில் பெண்களுக்கான பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ஏஞ்சலினா ஜோலியின் இந்நாள் காதலர். இவருடன் 'பேபெல்' படத்தில் நடிக்கிறார் ஷில்பா ஷெட்டி.
இவர்களுடன் சேகர்கபூர் இயக்கிய 'எலிசபத்' படத்தில் நடித்த கேட் பிளங்கெட்டும் முக்கிய வேடம் ஏற்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கயிருக்கிறது.
'பேபெல்' வெளிவந்தால் ஐஸ்வர்யாராய்க்கு சரியான போட்டியாக இருப்பார் ஷில்பா ஷெட்டி!
|