மலையாளத்தில் வெற்றி பெற்ற 'கதபறயும்போள்' படத்தை 'குசேலன்' எனற பெயரில் ரஜினி நடிக்க எடுத்து வருகிறார் பி.வாசு. தயாரிப்பு கவிதாலயா.
முதன் முறையாக ரஜினி படத்துக்கு இசையமைக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்குமார். மொத்தம் ஐந்து பாடல்கள். சென்னை பாம்குரோ ஹோட்டலில் தயாரான டியூன்களுக்கு லண்டனில் பாடல் மிக்ஸிங் செய்கிறார்கள்.
உலகில் உள்ள அதிநவீன ஒலிப்பதிவு கூடங்களில் லண்டனிலுள்ள மெட்ரோ பாலிஸ் ஒலிப்பதிவு கூடமும் ஒன்று. இங்கு ஒலிப்பதிவு செய்ய, சென்னையைவிட பல மடங்கு கட்டணம் அதிகம். 'குசேலன்' படத்தின் பாடல் மிக்ஸிங்கை இங்கு செய்ய திட்டமிட்டுள்ளனர். பதினைந்து நாள்கள் நடைபெறும் இந்த பாடல் மிக்ஸிங்கிற்காக 'குசேலன்' படத்தின் சவுண்ட் என்ஜினியர் ஸ்ரீதர் லண்டன் செல்கிறார்.
'குசேலன்' இசைக்காக செய்யும் செலவில், பட்ஜெட் படமொன்றே எடுக்கலாம் என்கிறார்கள், சினிமா கணக்கு அறிந்தவர்கள்.
|