அட்லாப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'சுல்தான் தி வாரியர்' அனிமேஷன் படத்தை தயாரித்து இயக்கிவரும் சௌந்தர்யா ரஜினி, வார்னர் பிரதர்ஸூடன் கூட்டணி அமைத்துள்ளது தெரியும்.
பிரபல ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், தமிழ்ப்படங்களை தயாரிக்க உள்ளது. அதற்கான பொறுப்பை சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவிடம் அந்நிறுவனம் ஒப்படைத்துள்ளது. விஜய், அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களிடம் இதற்காக கால்ஷீ்ட் கேட்கப்பட்டுள்ளதாம்.
அஜித் நடித்த 'பில்லா' பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆக்கர் ஸ்டுடியோ ஆர்வமாக உள்ளதாம். இதற்காக அஜித் மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் விரிவாக பேசி விட்டதாகவும் கூறுகிறார்கள்.
பில்லா பார்ட் டூவை சௌந்தர்யாவின் மேற்பார்வையில் வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் என்கின்றன செய்திகள்.
|