'வட்டாரம்' படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட சரண் இயக்கும் புதிய படம் 'மோதி விளையாடு'. முரளி மனோகர் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகன் வினய்.
படத்தில் நாயகியாக நடிக்க தனுஸ்ரீ தத்தாவை முயன்றார் சரண். மும்பை சென்று தத்தாவிடம் படத்தின் கதையையும் கூறினார். இந்திப் படங்களில் பிஸியாக இருக்கும் தத்தா கால்ஷீட் இல்லை என்று கைவிரித்ததால் காஜல் அகர்வாலை கதாநாயகியாக்கியிருக்கிறார்.
காஜல் நடித்த முதல் படம் 'பொம்மலாட்டம்'. அது இன்னும் பெட்டிக்குள்ளிருந்து வெளிவராத நிலையில், பேரரசுவின் 'பழனி' காஜலை அறிமுகப்படுத்தியது. 'பழனி' அத்தனை பாப்புலராகாததால் காஜலுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை. வெங்கட் பிரபுவின் 'சரோஜா'வில் மட்டும் மேகாவுடன் இன்னொரு ஹீரோயினாக சின்ன வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
வாய்ப்பு இல்லாமல் காய்ந்து கிடந்த காஜலுக்கு 'மோதி விளையாடு' கோடை மழை!
|