ரித்தீஷின் 'தில்லு முல்லு'
- 08.09.2008
By JBR
நாலுபேர் கூடினால் 'நாயகன்' பற்றியே பேசுகிறார்கள். குசேலனையே கொஞ்சம் ஓரமாக தள்ளி வைத்துவிட்டது ரித்தீஷின் இந்தப் படம்.
|
|
|
Rajinikanth
சென்னை பாக்ஸ் ஆபிஸில் 'தாம் தூம்', 'ஜெயம்கொண்டான்', 'சத்யம்' படங்களுக்குப் பிறகு நான்காவது இடத்தில் இருக்கிறது 'நாயகன்'. 'கானல் நீர்' என்ற பாடாவதி படம் தந்தவருக்கு 'நாயகன்', கிடைப்பதற்கரிய வெற்றி.
இந்த சுறுசுறுப்பில் அடுத்தப் படத்துக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார். படத்தின் பெயர் 'தில்லு முல்லு'. 'நாயகன்' கமல் படம். 'தில்லு முல்லு' ரஜினி படம். கமல், ரஜினி இணைகிற புள்ளிதான் நான் என்று விக்ரம் அடிக்கும் டயலாக்கை ரித்தீஷ் திருப்பி அடித்தாலும் ஆச்சரியமில்லை.
படத்தை இயக்குகிறவர் ஆதம்பாவா. ஆளை தெரியவில்லை என்றாலும், இவரின் ஆக்ஷ்ன் ரெம்ப பிரபலம். இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கு முதல்நாள், பந்தல் கட்டிக் கொண்டிருந்தவர்களை பந்தாடினாரே காரில் வந்த ஒருவர்...அந்த ஒருவர்தான் இந்த ஆத்மபாவா.
படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகள் அதிகம் இருக்குமாண்ணே?
|