யார்யா இந்த வசுந்தரா? உங்கள் கேள்வி நியாயமானது. ஆளை தெரியும், பெயர்தான் அந்நியம். இன்னும் குழப்புவானேன். சரணின் 'வட்டாரம்' படத்தில் அறிமுகமானரே, அதிசயா. அவர்தான் தனது பெயரை வசுந்தரா என்று மாற்றியுள்ளார்.
அடுத்து தான் இயக்கும் படத்தின் தமிழ் பதிப்பில் நடிக்க வசுந்தராவுக்கு ஸ்கிரீன் டெஸ்ட் நடத்தினார் மணிரத்னம். டெஸ்டில் வசுந்தரா பாஸ்! கெட்ட நேரம், மணிரத்னம் கேட்ட தேதிகளில் கால்ஷீட் இல்லை.
ஜனநாதனின் பேராண்மைக்கு பெருமளவில் கால்ஷீட் கொடுத்துள்ளார் வசுந்தரா. அட்ஜெஸ்ட் செய்து நடிக்கிறேன் என்று அவர் கூறியதை ஏற்க வில்லையாம் மணிரத்னம். ஐஸ்வர்யா ராயே நாள் கணக்கில் கால்ஷீட் தரவேண்டும் மணிரத்னம் படத்திற்கு. வசுந்தராவுக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு கிடைக்கும்.
வசுந்தரா நடிப்பது முற்று் பெற்றதால் வேறு நடிகையை தேடிவருகிறார் மணிரத்னம்.
பாலில் விழுந்த பழம் வாயில் விழாமல் இப்படி பாழாகவா போக வேண்டும் வசுந்தராவுக்கு!
|