'விசில்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். அதில் இடம்பெற்ற 'அழகிய அசுரா' பாடல் பட்டி தொட்டியெங்கும் பாப்புலராக இமானுக்கான அங்கீகாரம் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து 'கிரி', 'சின்னா', 'தலைநகரம்', 'வாத்தியார்', 'மருதமலை' உள்பட இருபதுக்கும் மேற்பட்ட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அர்ஜீன் நடிக்கும் படங்களுககு ஆஸ்தான இசையமைப்பாளர் இமான்தான்.
இடையில் இமானுக்கான வாய்ப்புகள் குறையவே தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்தார். தற்போது அதிக வாய்ப்பில்லாததால் திருமணம் செய்ய முடிவெடுத்த இமானுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்தனர். அதன்படி சென்னையை சேர்ந்த ரிச்சர்டு- ரீட்டா தம்பதிகளின் மகளான மோனிகாவை பேசிமுடித்து நி்ச்சயதார்த்தம் நடத்தினர்.
மணமகள் மோனிகா பி.இ படித்தவர். இமான் - மோனிகாவின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 1-ந் தேதி சென்னையில் நடந்தது. இதனைத்தொடர்ந்து இவர்களது திருமணம் ஏப்ரல் 24-ந் தேதி மாலை 7 மணிக்கு சென்னை செயின்ட் ஜான்ஸ் கதிட்ரல் சர்ச்சில் நடக்கிறது.
சில படங்களைத்தவிர இமான் இசையமைத்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதில்லை. திருமணத்திற்கு பிறகாவது அவருக்கு திருப்புமுனை ஏற்பட வாழ்த்துகள்!
|