தமிழ் திரைப்படத்தை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக வெளிவந்த 'பருத்திவீரன்' குவித்த வெற்றி இமாலய சாதனை. புதுமுகம் ஒருவர் நடித்து சர்வதேச அளவில் வெற்றி பெற்ற ஒரு படம் என்ற பெருமை பருத்திவீரனை தவிர வேறு எந்த படத்திற்கும் கிடைக்காத ஒன்று.
இப்படி தேசமெங்கும் இப்படம் புகழ்கொடியை ஒருபக்கம் நாட்டிக்கொண்டிருந்தபோதே தயாரி்ப்பு நிறுவனத்திற்கும் அமீருக்கும் இடையே கணக்குவழக்கு தொடர்பாக பல பிணக்குகள் ஏற்பட்டது. இது படத்தின் வெற்றிக்கான திருஷ்டி என்றே சொல்லவேண்டும்.
இதோ மறுபடியும் சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்கப்போகிறது 'பருத்திவீரன்'. பெர்லினில் நடக்கும் அவ்விழாவில் பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்வுள்ளது. அதில் பருத்திவீரனுக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது.
வரும் 12-ந் தேதிமுதல் 15 -ந் தேதிவரை நடைபெறவுள்ள விழாவில் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியிலான சப்-டைட்டிலுடன் 'பருத்திவீரன்' திரையிடப்படவுள்ளது.
தற்போது 'யோகி' பட வேலைகளில் பரபரப்பாக இருக்கும் அமீர் படப்பிடிப்பை ஒத்திவைத்துவிட்டு பெர்லின் செல்வதற்காக தயாராகிவருகிறார். அமீருடன் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் செல்கிறார்.
|